வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (10:53 IST)

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; திருமாவளவன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரது இழப்பு ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே பேரிழப்பு என்றும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் கூறினார். 
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதனை அடுத்து, பொதுமக்கள்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கிற்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு  செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அஞ்சலி செலுத்திய திருமாவளவன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை பேசுகையில் இழப்பு ஒட்டுமொத்த  இந்திய தேசத்திற்கே பேரிழப்பு என்று கூறினார். அவர் தமிழகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் அதிகம் என்றும் மாநில உரிமைகளை கடைசி வரை எதிர்த்து நின்று காப்பாற்றியவர் என்றும் கூறினார். மேலும் நெருப்பாற்றில் நீச்சல் அடித்து அரசியலில் வெற்றி பெற்றவர். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர்  கருணாநிதி. இறுதி மூச்சு வரையில் போராட்டம் தான் வாழ்க்கை என்று போராளியாக வாழ்ந்து காட்டியவர் என்றார்.
 
அதனைத் தொடர்ந்து தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட அகில இந்திய அளவில் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு அண்ணா சமாதி வளாகத்திற்குள் கலைஞர் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ள  வேண்டும் என வலியுறுத்தியதோடு, இந்த போராட்டத்திலும் அவர் வெற்றி காண்பார் என்றும் கூறினார்.