திருவாரூர் செல்கிறார் திமுக தலைவர் கருணநிதி


Caston| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (09:00 IST)
திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தலைவர் கருணாநிதி 2 நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் செல்கிறார்.

 
 
இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு போன தேர்தலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது திருவாரூர் தொகுதிக்கு செல்ல பல நாட்களுக்கு முன்னரே திட்டுமிட்டு பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
 
தற்போது இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூர் செல்லவிருக்கும் கருணாநிதி, ஜனவரி 25-ல் திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கவிருக்கும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
 
ஜனவரி 26-ல் காலையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கும் கணாநிதி, மாலையில் கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
 
சமீபத்தில் முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் தன் மீது திருப்பிய கருணாநிதி, தற்போது மேலும் சுறுசுறுப்பாகி தனது தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :