புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 6 மே 2020 (14:36 IST)

நாளைக்கு கால்மணி நேரம் வெளியே நில்லுங்கள்! – போராட அழைக்கும் திமுக!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது எதிர்க்கட்சியான திமுக.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை தொடங்குவதற்கு எதிராக திமுக அறிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழ்காத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும். 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு தங்களது வீடுகளுக்கு வெளியே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.