திமுக ஒருநாளும் திருந்தாது. இந்த லட்சணத்தில் ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது. – ஹெச்.ராஜா
திருப்பூர் அருகே ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்க திமுக திமுக நிர்வாகிகள் இடையூறு செய்வதாக, சேவா பாரது அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
திருப்பூர் பெருமாநல்லூர் பாஜக ஒன்றிய தலைவர் ஜெகதீஸ், கடந்த 1 ஆம் தேதிமுதல் சேவா பாரதி சார்பில் கோவில் மண்டபத்தில் உணவு கொடித்து வருகின்றனர். அவர்களோரு இணைந்து பாஜகவினர் சேர்ந்து உதவி செய்து வருகின்றனர். ஆனால், கோவிலில் சமைக்கக் கூடாது என ஊராட்சி துணைத்தலைவர் வேலுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தினமும் 130 பேருக்கு சாப்பாடு கொடுங்கள் என நெருக்கடி கொடுப்பதாக புகார் கூறியிருந்தார்.
இதுகுறித்து வேலுசாமி கூறியதாவதும், தனியாக உணவு கொடுக்க கூடாது என மாநில அரசு கூறியதைத்தான் கூறியதாகவும், ஊராட்சி சார்பில் உணவு தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ''திமுக ஒருநாளும் திருந்தாது. இந்த லட்சணத்தில் ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது'' எனப்பதிவிட்டுள்ளார்.