மதிமுகவுக்கு இத்தனை தொகுதிதான்… கெடுபிடி காட்டும் திமுக!
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாம் திமுக.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வைகோ ஆரம்பத்தில் 12 தொகுதிகள் கேட்டு இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்தது போல 6 தொகுதிகளாவது வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம்.
ஆனால் திமுக தரப்பில் 4 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என பிடிவாதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலைக்குள் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும் என சொல்லப்படுகிறது.