புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (08:35 IST)

திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம். அப்பகுதி திமுக வட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட அவரது மனைவில் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் ராஜாஜி நகர் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் செல்வம் கொலைக்கு தொழில் பகை காரணமா? அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வரூவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.