செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:08 IST)

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார்??.. தொடங்கியது நேர்காணல்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து ஒரு சில மூத்த தலைவர்கள், விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டாம் என்று அறிவுரை கூறிவந்ததாக தெரியவருகிறது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், உதயநிதி போட்டியிடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.