செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 ஜூன் 2018 (16:17 IST)

பழனிச்சாமி மீது ஊழல் புகார் - லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்

சாலை போடும் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பல ஆயிரம் கோடி ஊழல் செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
ரூ. 5000 கோடி மதிப்புள்ள சாலை போடும் ஒப்பந்தங்களை, தனது உறவினர்களும் பினாமிகளும் நடத்தும் நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் முதலமைச்சருமான எடப்பாடி வழங்கியுள்ளார்.
 
எனவே, எடப்பாடி மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்ட அவர் பினாமிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி இன்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஜெயந்த முரளியை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
 
ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சென்னை- சேலம் 8 வழிச்சாலையின் ஒப்பந்தம் கூட எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவேதான், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி கசிந்தது குறிப்பிடத்தக்கது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என சமீபத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.