திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (07:55 IST)

அனுதாப வாக்குகளுக்காக இப்படி ஒரு நாடகமா ? – திமுக வேட்பாளர் குட்டு அம்பலம் !

மலைநாடு பகுதி திமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் அண்ணாமலை என்பவர் அனுதாப வாக்குகளை பெறுவதற்காக விஷம் குடித்தது போல் நாடகமாடி உள்ளார்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் பெரிய கல்வராயன்மலை மேல்நாடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(57). இவர் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

நேற்று முன்தினம் அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இவரது போட்டி வேட்பாளர்கள் இவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தகவல்கள் பரவின. ஆனால் போலீஸ் விசாரணையில் மக்களிடம் அனுதாப வாக்குகளை வாங்குவதற்காக, அண்ணாமலையே விஷத்தை அருந்தியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இந்த வேட்பாளர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுகவால் நிறுத்தப்பட்டவர் ஆவார்.

தற்போது அண்ணாமலை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் அவர் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் தான் உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.