வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (12:45 IST)

ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ எதிர்க்கும் திமுக வேட்பாளர்கள்: சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திமுக வேட்பாளர் பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அறிவித்துக் கொண்டிருக்கிறார். இதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன 
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த சம்பத்குமார் போட்டியிடுகிறார். இவர் உள்ளூரில் செல்வாக்குள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் தான் அமமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி சென்னை சேப்பாக்கம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலின் முழு தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது