புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:22 IST)

திமுகவும், காங்கிரசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர்....ஓ பன்னீர்செல்வம் டுவீட்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையான விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அதேசமயம் ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புதுப் பாணியில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் செய்த துரோகத்தின் பலனாகத்தான் கடந்த பத்தாண்டுகளாக திமுகவும், காங்கிரசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, வன வாசத்தை அனுபவித்து வருகின்றன.

தமிழக மக்கள் திமுகவை கைவிட்டு விட்டார்கள்; காங்கிரசை எப்போதோ கை கழுவி விட்டார்கள். #TamilNaduElections2021 எனத் தெரிவித்துள்ளார்.