வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (10:01 IST)

கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க திமுக முடிவு

சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க திமுக முடிவு
கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும் திமுகவை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
 
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்காமல், தனிமைப்படுத்திக் கொள்வோம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத்தொடர் நடைபெறுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
 
திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறியபோதிலும், சட்டமன்ற கூட்டத்தொடரை திட்டமிட்ட தினத்திற்கு முன்னதாக முடித்து கொள்ளும் அறிவிப்பு எதுவும் இப்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது