வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (10:53 IST)

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? – திமுக ஆலோசனை!

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் “9 மாவட்ட ஊராட்சி தேர்தல் இடங்கள் குறித்து கூட்டணி கட்சியினருடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.