ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (11:07 IST)

நானும் என் பொண்டாட்டியும் எப்பவோ சொன்னோம்.. App Ban குறித்து விஜயகாந்த்!!

சீன செயலிகளின் தடைக்கு வரவேற்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும். 
 
இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடுவிளைவிக்கக்கூடிய டிக்டாக், ஷேரிட், ஹலோ, உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது வரவேற்க்க தக்க ஒன்று.
 
இந்த டிக்-டாக் போன்ற செயலியால் எத்தனையோ லட்சக்கணக்கான பெண்களும், குடும்பங்களும் சீரழிந்து வருவதாகவும், குறிப்பாக இந்த செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டாம் என நானும் எனது மனைவியும் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
 
இந்தியா - சீன எல்லையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சில நாட்களாகவே சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கவேண்டும். சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீன நாட்டிற்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.