வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:57 IST)

தீபாவளிக்கு அரசு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு.. ஒரு மணி நேரத்தில் டிக்கெட் காலி..!

bus
தீபாவளி தினத்தில் சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளுக்குமான டிக்கெட் காலி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருவதாகவும் இது தவிர வழக்கம் போல் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
அதேபோல் நவம்பர் மூன்றாம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான டிக்கெட் வரும் விரைவாக நிரம்பி வருகிறது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva