திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:27 IST)

நவ.5, 6ல் பள்ளிகளுக்கு விடுமுறை: புதுவை அரசு அறிவிப்பு!

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாட இருப்பதை அடுத்து நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்
 
இதன் காரணமாக நவம்பர் 4 முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நவம்பர் 5ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து பள்ளிகளுக்கு நவம்பர் 4,5,6,7 என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது