செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (15:26 IST)

தினகரனை நம்பி பிரயோஜனம் இல்ல...? சசிகலாவை நோக்கி கிளம்பும் படை!

அமமுகவில் தினகரனின் நம்பிக்கைகுரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி சில அதிருப்திகள் காரணமாக திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தினகரன் தெரிவித்திருந்தார். 

 
என்னதான் பிரச்சனை இல்லை அவர் நல்லபடியாக இருக்க வேண்டும் என வாழ்த்தினாலும் உள்ளுக்குள் வருத்தம் இருக்கதானே செய்யும். இந்த வருத்தம் அவருக்கு மட்டும் இல்லை மீதமுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களும்தான். 
 
அதாவது, மீதமுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அடுத்து தங்களது நிலைபாடு என்னவென்ற வருத்தத்தில் உள்ளனர். இப்போது உள்ள சூழ்நிலையில் தினகரனே அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான் உள்ளார் போல.
 
இந்நிலையில், தங்க தமிழ்செல்வன் உள்ளிட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மேல் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
சசிகலாவை சந்தித்து இனி அடுத்து எங்களது அரசியல் நிலைபாடு என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்டு தெளிவுபெற உள்ளதாக கூறப்படுகிறது. தினகரனும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் செல்கிறாரா அல்லது தனியாக செல்கிறாரா என்பது தெரியவில்லை.
 
இதற்கு சசிகலா என்ன பதில் சொல்வார், அடுத்த என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பது விடை தெரியாக கேள்வியாக உள்ளது.