1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (14:12 IST)

மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு: உடனே பள்ளிகளை திறக்க கோரிக்கை!

மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்து வருவதால் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு எழுப்பப்பட்டு வருகிறது 
 
கடந்த 2019 2020 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 21 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டில் 10 சதவீத மாணவர்கள் இடைநிற்றலை செய்துள்ளதாக தெரிகிறது/ குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாகவும் நீண்ட காலமாக பள்ளிகள் திறக்க அதன் காரணமாக பள்ளிப் படிப்பை இடையிலேயே நின்று விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தும் பணியை நடத்த உத்தரவு விட இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் நீண்ட காலமாக பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை என்பதால் பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்த கொஞ்சம் சிரமம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்