செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜனவரி 2018 (21:20 IST)

இயக்குனர் மகேந்திரனுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அனுமதி

'உதிரிப்பூக்கள்' போன்ற காலத்தால் அழியாத காவிய படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் சமீபத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு பின்னர் அவர் நடிகராக ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை படக்குழுவினர் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இயக்குநர் மகேந்திரன் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக புதுக்கோட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.