திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (18:16 IST)

கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் போன தினேஷ் கார்த்திக்

காவிரி பிரச்சனை உச்சத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது. குறைந்தபட்சம் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளளயாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 
இந்த நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளிக்க மறுத்துவிட்டார்.  மேலும் காவிரிக்காக தமிழராக உங்களது எதிர்ப்பை பதிவு செய்வீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தாலும் தினேஷ் கார்த்திக் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் வராதது அதிருப்தியை வரவழைத்துள்ளது.
 

மேலும் இதே கேள்வியை மைக் ஹஸ்ஸி அவர்களிடம் கேட்டபோது, 'தமிழகத்தில் நடக்கும் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். மைக் ஹஸ்ஸி கூறிய பதிலை கூட தினேஷ் கார்த்திக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.