1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (19:26 IST)

அமைச்சரின் பேச்சை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ!

அமைச்சரின் பேச்சை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை ஆளும் அதிமுகவின் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ சுப்பிரமணியன் புறக்கனித்தார். அதிமுக எம்எல்ஏவே புறக்கணித்ததால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.


 
 
தமிழக சட்டசபையில் இன்று பால்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான கேள்விகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென எழுந்த அதிமுகவின் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ சுப்பிரமணியன் அமைச்சரின் பேச்சை புறக்கணிப்பதாக கூறினார். தனது தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சர் ஒத்துழைப்பு தருவதில்லை என்று அவர் புறக்கணிப்பு செய்தார். இந்த சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சுப்பிரமணியன் தினகரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.