1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (15:16 IST)

ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. திருமண விழாவில் தினகரன் பேட்டி..!

TTV Dinakaran
கும்பகோணத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தை சேர்ந்த தினகரன் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
தினமும் மூன்று நான்கு கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது என்றும் அதில் கைதாகும் இளைஞர்கள் எல்லாம் 20 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கஞ்சா கலாச்சாரம் போதை கலாச்சாரம் காரணமாக இளைஞர்கள் அதற்கு அடிமையாகி குற்றங்களை செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
5000 10,000 ரூபாய் கொடுத்தால் கூட கொலை செய்யும் கூலிப்படை ஆட்களாக நிறைய இளைஞர்கள் மாறி வருகிறார்கள் என்றும் எனவே தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்றும் முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சரியாகும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் 
 
Edited by Siva