செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (12:37 IST)

சொல்லி அடித்த கில்லி டிராபிக் ராமசாமி

சொல்லி அடித்த கில்லி டிராபிக் ராமசாமி

தஞ்சையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என நீதிமன்ற படிக்கட்டுக்களை தட்டியுள்ளார் டிராபிக் ராமசாமி.
 

 
தஞ்சை நாச்சியார்கோவிலில் பல இடங்களில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து, தஞ்சை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நீதிபதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்த  டிராபிக் ராமசாமி மீண்டும் சட்டப் போராட்டத்திற்கு தயாரகியுள்ளார்.