1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:07 IST)

ரஜினி ’முதல்வராக’ யாகம் நடத்தினாரா ? ரசிகர்கள் ஆர்வம் !

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று  ’பீமரத சாந்தி யாகம்’ என்ற பூஜையை நடத்தி உள்ளார்.  தற்போது, இதுகுறித்துதான் அவரது ரசிகர்களின் பேச்சாக உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில், தனது ஆன்மீக அரசியல் வருகையை அறிவித்து, தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாகப் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்தார். அதன்பிறகு அவரது ரசிகர்கள் படு சுறுசுறுப்பாகினர். ஆனால், ரஜினி 2.0, பேட்ட ஆகிய படங்களில் பிசியானார். தற்போது,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர்  ’தர்பார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் பொங்களுக்கு திரைக்கு வர உள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில்,அவர் தமிழகத்துக்கு நல்லது என்றால் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார் என் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
 
இந்நிலையில், நேற்று, ரஜினி தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து, ’பீமரத சாந்தி யாகம்’ என்ற பூஜையை செய்துள்ளார்.
 
இந்த யாகம் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்க்காக செய்யப்படவில்லையாம். அவருக்கு, இந்த மாதம் டிசம்பர் 12 ஆம் தேதி வந்தால் ரஜினிக்கு வயது  69 தொடங்கவுள்ளது. எனவே 70 வயதை நெருங்குபவர்கள் ஆயுள் விருத்திக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் செய்யப்படும்  யாகமே இந்த ’பீமரத சாந்தி யாகம்’ என்ற தகவல் வெளியாகிறது.
 
அதேசமயம் ரஜினியின் சகோதரர், சத்யநாராயணராவ், ரஜினி வரும் 2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேண்டுமென யாகம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.