பைக் ஒட்டி....கார் ஒட்டி இப்போ கப்பல் ஓட்ட போயிட்டாரு தல...! வைரலாகும் வீடியோ!

papiksha| Last Updated: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:36 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனி
கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காததால் வாழ்க்கையை மிகவும் ரசித்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

நேற்று தோனியின் மகன் ஜிவா தனது 5வது பிறந்தநாளை கொண்டாடினர். மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தோனி மனைவி மற்றும் நண்பர்களுடன்
மாலத்தீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் தோனி தனது சக அணி வீரரான ஆர்.பி.சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பானிபூரி வழங்கும் வீடியோ மற்றும் வாலிபால் விளையாடும் வீடியோ என இணையத்தில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது தோனி
ஷிப் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. தோனி ஆரம்ப காலத்திலிருந்தே பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. எந்த அளவிற்கு என்றால், தனது பண்ணை வீட்டில் பைக் மற்றும் கார்களை
நிறுத்துவதற்காகவே தனி இடத்தை வைத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :