1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (14:00 IST)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- பெயரை அறிவித்தார் தினகரன்

ஆர். கே. நகர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தனது புதிய அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைத்துள்ளார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராகவும், அதிமுகவின் மற்றொரு அணியாகவும் தினகரன் செயல்பட்டு வருகிறார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்களும், சில எம்.பிக்களும் உள்ளனர். அந்நிலையில், குக்கர் சின்னத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். 
 
தனது புதிய கட்சிக்கு ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் பரிந்துறை செய்திருந்த அனைத்து இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆா். முன்னேற்ற கழகம் ஆகிய மூன்றில் ஒன்றை தனது கட்சியின் பெயராக மார்ச் 15ம் தேதி அறிவிக்க உள்ளதாக  தெரிவித்தார்

அதுபோல, இன்று மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் தனது அணிக்கு “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். மேலும், கருப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் உருவம் இருப்பது போன்ற அணியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.