திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (12:19 IST)

தருமபுரியில் கவிழ்ந்த எண்ணெய் லாரி! – குடத்தில் அள்ளிய மக்கள்!

தருமபுரியில் சமையல் எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேக்கர் லாரி ஒன்று எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓரம்கட்டியபோது சரிந்து வயல்பரப்பில் கவிழ்ந்தது.

அதிலிருந்த டிரைவர் சிறிய காயங்களுடன் தப்பித்த நிலையில் லாரி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த சமையல் எண்ணெய் வயலில் கொட்டியது. இதையறிந்த சுற்றுப்பகுதியில் இருந்த மக்கள் குடம், பாத்திரங்களுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு டேங்கரில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பாத்திரங்களில் பிடித்து சென்றுள்ளனர்.