1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (17:13 IST)

தன் பயோபிக் படத்தை வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடிக்க...-சவுக்கு சங்கர் ஓபன் டாக்

சவுக்கு சங்கரின் பயோபிக் படம் உருவாகவுள்ளதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
 

பிரபல யூடியூபராகவும், சவுக்கு மீடியாவை நிர்வகிப்பவரும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது.

சமீபத்தில் அவர் சிறையில் இருந்தபோது, அவருக்கு ஆதரவாக சீமான்  குரல் கொடுத்திருந்தார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும் என  நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்.  சிறையில் இருந்து ரிலீஸான  பின்னர் சீமானை  நேரில் சந்தித்துப் பேசினார், சவுக்கு சங்கர்.

தற்போது பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிரான அதிரடியான கருத்துக்களை கூறி வரும் சவுக்கு சங்கர் ஒரு மீடியாவுக்குப் பேட்டியளித்தார்.

அதில், உங்கள் பயோபிக் படத்தை யார் இயக்க வேண்டும்? அதில் யார் நடிக்க வேண்டும் ? என்ற கேள்வி எழுப்பப்பட்டடது. அதற்குப் பதில் அளித்த சவுக்கு சங்கர்,  ‘’தன் பயோபிக் படத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இப்படத்தை வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.