கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம்: வடபழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
சென்னை வடபழனி முருகன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெறத் தொடங்கி உள்ளது. இதனை அடுத்து வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது
இந்த நிலையில் நேற்று முதல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இன்று அடுத்த 48 நாட்கள் நடைபெற உள்ள மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி உள்ளன
இதனை அடுத்து இந்த பூஜையைக் காண முருக பக்தர்கள் கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதும் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது