வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (11:40 IST)

தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள 20 சுங்கச் சாவடிகளின் விவரம்

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில்  வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் . பராமரிப்பு மற்றும்  பணியாளர் ஊதியம் உள்ளிட்ட சில காரணங்களால்  கட்டணம் உயர்த்தப்படுகிறது . இந்நிலையில் வழக்கம் போல்
மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் சுங்கச் சாலைகளில் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவுசெய்துள்ளது. 
 
இதன்படி தமிழகத்தில்   ஆத்தூர், சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரனூர்,  வானூர்,  ஸ்ரீபெரும்புதூர், வாணியம்பாடி, சூரப்பட்டு உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம்  ரூ.5 முதல் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கார், ஜீப், போன்ற இலகுரக வாகனங்களுக்கு ரூ.55 இல் இருந்து ரூ.60 ஆகவும், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.90 இல் இருந்து ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதேபோன்று கனரக பயண வாகனம், கனரக கட்டுமான வாகனம் என அனைத்து வாகனங்களுக்கும் தற்போதுள்ள கட்டணத்திலிருந்து ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.   
இதன் காரணமாக இனி ஒவ்வொரு பயணத்திற்கும் 10 சதவீதம் கூடுதலான கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்