1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (17:24 IST)

ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் கும்பாபிஷேகம் -கே.சி. பழனிசாமி

kc palanisamy
மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை மீட்க வேண்டும். ஒவ்வொரு கோவிலையும் அந்தந்த பகுதியில் உள்ள மக்களை வைத்து குழு அமைத்து நிர்வகித்து கொள்ளலாம் அல்லது மத அமைப்புகள் மூலம் நிர்வகித்து கொள்ளலாம் என்று  அண்ணாமலை
 போராடுகிறார்.

ஆனால் மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி  பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா?

அண்ணாமலை தெரியாமல் பேசுகிறாரா? அல்லது பிரதமர் மோடி அண்ணாமலை கருத்திற்கு எதிராக செயல்படுகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.