வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (07:42 IST)

வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பாதிப்பு இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
மீண்டும் தோன்றியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்தெந்த மாவட்டங்களுக்கு கன மழையை கொடுக்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது