வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (18:14 IST)

சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம்; அறநிலையத்துறை உறுதி

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விவகாரத்தில் சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆனால் பல்லாண்டு காலமாக  பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மேலும் அறநிலையத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கை சமஸ்கிரதம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்துவது பற்றி உயர் நீதிமன்றத்தி அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.