அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் விளைவாக, தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மொத்தம் 31 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே இருக்கும். இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மும்மொழிக் கொள்கை, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு அதிக அளவிலான மக்களவை உறுப்பினர்கள் தேவை. "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவில் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது," என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva