செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:18 IST)

ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்

பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா, நடிகர் ரஜினிகாந்த் மீது தாக்கல் செய்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ரஜினியின் சம்மந்தியும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா, பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய கடனுக்காக கொடுத்த செக் ஒன்று வங்கியில் போதுமான பணம் இல்லாததால் திரும்பிவிட்டது. இதனையடுத்து கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடர்ந்த போத்ரா, இந்த வழக்கில் ரஜினியையும் சம்பந்தப்படுத்தினார்.

ஆனால் இந்த வழக்கில் தன்னுடைய பெயரை வேண்டுமென்றே போத்ரா சம்பந்தப்படுத்தியிருப்பதாகவும், தன்னிடம் பணம் பறிக்கவே அவர் இதனை செய்திருப்பதாகவும் பதில் மனு தாக்கல் செய்தார்.

ரஜினியிடம் தான் பணம் கேட்காத நிலையில் தன்னைப்பற்றி அவதூறு கூறியதாக போத்ரா, ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.