வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:07 IST)

பிப்ரவரி 23 கடற்கரை சாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு!

பிப்ரவரி 23 கடற்கரை சாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு!
சமீபத்தில் குடியரசு தின ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் மற்றும் கலந்து கொள்ள அனுமதிக்கப் படாத அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் ஆகியவை வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சென்னை கடற்கரை சாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனுமதிக்கப்படாத அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தது.
 
இந்த நிலையில் தற்போது அந்த அலங்கார ஊர்திகள் சென்னை திரும்பி உள்ள நிலையில் தற்போது பிப்ரவரி 23ஆம் தேதி மெரினா கடற்கரைச் சாலையில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளன.
 
இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட ஊர்திகள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட ஊர்திகள் ஆகிய அனைத்தும் மெரினா கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.