அர்ஜூனா மூர்த்திக்கும் என் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: தயாநிதி மாறன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் தனது ரஜினி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நேற்று அவர் நியமனம் செய்தார்
இந்த அர்ஜுனா மூர்த்தி ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த நிலையில் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் ஆலோசகராகவும் உதவியாளராகவும் அர்ஜூனா மூர்த்தி இருந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் இந்த செய்தியை முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் ரஜினிகாந்த் அவர்களால் துவக்கப்பட உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனா மூர்த்தி எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அதுபோன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தயாநிதிமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்