திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:18 IST)

பெரியார் ஈ.வெ.ரா சாலையின் பெயர் மாற்றம்: தயாநிதி மாறன் கண்டனம்

சென்னையிலுள்ள பெரியார் ஈவெரா சாலையின் பெயர் மாற்றப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
தமிழக தேசிய நெடுஞ்சாலை துறையின் இணைய தள பக்கத்தில் பெரியார் ஈவேரா சாலைக்கு பதிலாக டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது 
 
இதனை அடுத்து தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலையும் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது ’பெரியார் கொள்கையை தான் அதிமுக அரசு மறந்துவிட்டது என நினைத்தால் சாலைக்கு சூட்டிய பெயரையும் மறுப்பது ஏனோ? என்று அவர் தனது கண்டனத்தை குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது