திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (12:48 IST)

அப்பா இல்லாம கல்யாணம் இல்ல.. மெழுகு சிலையாக வாழ்த்திய அப்பா! – நெகிழ வைத்த சம்பவம்!

Wax Statue
கள்ளக்குறிச்சியில் இறந்துபோன தனது தந்தயை போலவே மெழுகு சிலை செய்து அதன் முன்பு மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் செல்வராஜ் காலமானார்.

சமீபத்தில் செல்வராஜின் இளையமகள் மகேஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனினும் தந்தை மீது பாசம் கொண்ட மகேஸ்வரி தனது தந்தை இல்லாமல் திருமணம் நடப்பது குறித்து மனம் வருந்தியுள்ளார். இதனால் தந்தை போலவே மெழுகு சிலை ஒன்றை செய்து அதன் முன் திருமணம் செய்துகொள்ள முடிவெடித்துள்ளார்.

அதற்கு இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ரூ.5 லட்சம் செலவில் வடிவமைப்பாளர்களை கொண்டு தத்ரூபமாக செல்வராஜின் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட தம்பதியர் மெழுகுசிலையான செல்வராஜின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.