வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (10:54 IST)

வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை! கைதுக்கு பயந்த மாமியாரும் தற்கொலை முயற்சி!

Kanyakumari dowry death.jpg

கன்னியாக்குமரியில் வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கைதுக்கு பயந்து மாமியாரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கன்னியாக்குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கோவையை சேர்ந்த சுருதி என்ற பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் நிச்சயம் செய்யப்பட்டு சில மாதங்கள் முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கின் தாயார் செண்பகவல்லி, மருமகள் சுருதியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

 

இதில் விரக்தியடைந்த சுருதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னர் சுருதி தனது தாயாருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன் மாமியார் செண்பகவல்லி செய்யும் கொடுமைகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
 

 

அதை ஆதாரமாகக் கொண்டு மாமியார் செண்பகவல்லி மீது சுருதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் தன்னை எப்படியும் கைது செய்துவிடும் என பயந்த செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Edit by Prasanth.K