பல்லக்கு சர்ச்சை- திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!

கோப்புப் படம்
Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (09:44 IST)
கோப்புப் படம்

திருப்பனந்தாள் ஆதினம் மாசிலாமணி தேசிக சம்மந்தரை பல்லக்கில் வைத்து வீதியுலா செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி க வினர் போராட்டம் நடத்த முறபட்டதால் அந்நிகழ்ச்சி கைவிடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றுள்ளார் மாசிலாமணி தேசிக சம்மந்தர். இதையடுத்து இவர் அந்த ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திருப்பனந்தாள் வர இருந்த அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்டினப் பிரவேசம்' எனப்படும் பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்புத் தெரிவித்து திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள்
ஆகியோரும் திரண்டனர். இதையடுத்து போராட்டத்தை கேள்விப்பட்ட மாசிலாமணி தேசிக சம்மந்தர் தான் நடந்தே செல்வதாக அறிவித்தார். இதையடுத்து இந்த செய்தி போராட்டக்காரர்களுக்குத் தெரிந்து ‘பெரியார் வாழ்க….அம்பேத்கர் வாழ்க… ஆதினத்துக்கு நன்றி’எனக் கோஷம் எழுப்பி சென்றனர்.இதில் மேலும் படிக்கவும் :