சாகர் புயலால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா?
தமிழகத்தில் ஏராளமான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு அரபிக் கடலில் சாகர் என்ற புயல் சின்னம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சாகர் புயலாக வலுவடைந்துள்ளது. இதனால் தென்மேற்கு அரபிக் கடலில் ஏமனை ஓட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.