1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (18:43 IST)

தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்: சிவி சண்முகம்

தைரியம் இருந்தால் மதுவிலக்கு மற்றும் கலால் துறையை உதயநிதியிடம் கொடுத்துப் பாருங்கள் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தமிழக முதல்வருக்கு சவால் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது அமைச்சர் முத்துசாமி அவர்கள் தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். 
 
முதல்வரே உங்களுக்கு தைரியம் இருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளை அடித்து உங்கள் குடும்பத்திற்கு கொடுப்பார், வழக்கு என்று வந்தால் மட்டும் அந்த துறையை வைத்திருப்பவர் சிறைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வியை சிவி சண்முகம் எழுப்பி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran