1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:13 IST)

முதல்வர் தலைமையில் ஊரடங்கு ஆலோசனை

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது.

இந்நிலையில் தமி்ழகத்தில் நாள்தோறும் குறைந்த அளவு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனவே, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்றுக் காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதாக இருந்த நிலையில், இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கு உத்தரவுகளில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் திறக்க வேண்டும்  எனத்  திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இதுதொடர்பான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.