வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜனவரி 2021 (13:31 IST)

ஒரு அப்பா இதக் கூட கேட்கக்கூடாதா? கொலை செய்த மகன்!

கடலூரில் குடிபொதைக்கு அடிமையாகி பிரச்சனைகள் செய்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்  மீன் பிடி தொழிலாளர் 55 வயதான பரசுராமன். இவரின் இளையமகன் சக்திவேல் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தந்தையோடு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் குடிக்கு அடிமையாகி ஊரிலும் வீட்டிலும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து மது போதையில் இருந்து வெளிவர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சக்திவேல் மதுவருந்தியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரசுராமன் முயன்றுள்ளார். ஆனால் வரமறுத்த அவர் இரும்புக்கம்பியால் பரசுராமனை தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப்போக்கால் பரசுராமன் சம்பவ இடத்திலெயே பலியாகியுள்ளார். இதனால் பதற்றமான சக்திவேல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன் பின்னர் போலிஸார் அவரை மார்க்கெட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.