வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (07:42 IST)

போலீஸ்காரரை ஒருமையில் திட்டிய கலெக்டர் ! அதிருப்தியில் காவல்துறை!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த காவலரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் இரவுப் பகலாக உழைத்து வருகின்றனர். இதில் விடுப்பே இல்லாமல் உழைத்து வருகிறார்கள் காவல்துறையினர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சக்குப்பம் பகுதி சப் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இரு தினங்களுக்கு முன்னர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து அதிகாரிகளை ஒருமையில் திட்டி அவமானப் படுத்தியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தனது மேலதிகாரிகளிடம் புகார் சொல்ல, இது சம்மந்தமாக கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.