வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (09:28 IST)

கோவை மாணவி தற்கொலை: கைதான பள்ளி முதல்வருக்கு ஜாமீன்!

கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஆசிரியர் மிதுன் மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்/ மகளிர் காவல் நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மாணவி குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஜாமீன் மனு உத்தரவில் தமிழக அரசுக்கு நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது