செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (20:27 IST)

கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் கே.என். நேரு

KN Nehru
கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு  தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம்  நேற்று சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால், மனிதக்  கழிவுகளை அகற்றும் பணி செய்வோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு 7  -ன் படி நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  இன்று அமைச்சர் கே.என். நேரு இதுபற்றி கூறியதாவது: கழிவு நீர்தொட்டி சுத்திகரிப்பு பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.