வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 மே 2021 (21:39 IST)

தோல்வியின் போது ஓடிப்போகும் கோழைகள்...துரோகிகள் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

இன்று மய்யம் நீதி மய்யம் கட்சியிலிருந்து  அக்கட்சியின் துணைத்தலைவர் விலகுவதாக அறிவித்துள்ள நிலையின் விலகிய நிர்வாகிகள் மீது ம.நீ.ம கட்சி  தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றுநடைபெற்ற ம.நி.ம கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியில் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.  கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என பொன்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

 இதுகுறித்து மகேந்திரன் கூறியதாவது:  ம.நீ,கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப்பிறகும் கமல்ஹாசன் தன்து அணுகுமுறையில் இருந்து  மாறுபடுவதாகத்  தெரியவில்லைல் நம்பிக்கையுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் , துணைத்தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு, சிகே குமரவேல், மவுரியா, பொதுச்செயலாளர் முருகானந்தன், நிர்வாகக்குழு உறுப்பினர் உமாதேவி,  உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:

ம.நீ.மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ளத் துணித்தவர்.

திறமையின்மையை மற்றும் நேர்மையின்மையினால் மகேந்திரன் அடுத்தவ மீது பழி போட்டு அனுதாபம் தேட மகேந்திரன் செய்கிறார். துரோகிகளின் பட்டியலில் முதலில் இருந்தவர் மகேந்திரன். உழைக்கத் தயாராக இருந்தவ்ர்களைத் தடுத்தவர் அவர்தான். அவர் விலகியதில் மகிழ்ச்சி இனிமேல் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

மேலும், தோல்வியின்போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடிப்போகிற கோழைகளைப் பற்றி நான் ஒருபோதும் பொருட்படுத்தியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.