திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:34 IST)

தெய்வபக்தி இல்லாதவரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டாம்: சென்னை ஐகோர்ட் அதிரடி

court
தெய்வபக்தி இல்லாதவரை கோவில் அறங்காவலராக நியமிக்க வேண்டாம் என சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அறங்காவலர் தேர்வுக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் 
 
குறிப்பாக தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று தெய்வபக்தி இல்லாதவரை கோவில் அறங்காவலராக நியமிக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது 
 
இதுகுறித்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran